இபிஎஸ்-யை முதுகில் குத்த காத்திருக்கும் 23 எம்எல்ஏ.,க்கள்.! ஓபிஎஸ் தரப்பு கொண்டாட்டம்.!  - Seithipunal
Seithipunal


செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்ததாவது, "கட்சி, கொடி, சின்னம் இவ்வளவுதாங்க. தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளரும் ஓ பன்னீர்செல்வம் தான். அவர் தலைமையில் தான் தற்போது கட்சியின் தொண்டர்கள் செயல்படுவார்கள்.

தொண்டர்களை சந்திக்க 'புரட்சி பயணம்' என்று பெயரில் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 

முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி அதிமுகவை விட்டு திமுகவில் இணைந்தார் என்றால், அது அவருடைய விருப்பம். ஆனால் அதிமுகவிலிருந்து வேறு யாரும் திமுகவிற்கு செல்ல மாட்டார்கள்.

அம்மா மீது விசுவாசம் மிக்கவர்கள், கட்சியின் மீது விசுவாசம் இருக்கிறவர்கள், புரட்சித்தலைவர் மீது விசுவாசம் இருக்கிறவர்கள் திமுக பக்கம் செல்ல மாட்டார்கள். கட்சியை விட்டு ஒரு சிலர் போகிறார்கள் என்றால், அவர்கள் இடையில் வந்து இடையில் செல்பவர்கள். 

இப்போது இருக்கின்ற 20 முதல் 23 சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் பன்னீர்செல்வத்துடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். பேசுகின்ற அனைவருமே 'அதிமுக என்றால் அது நீங்கள் தான். உங்களுடன் தான் இருப்போம்' என்று உறுதி அளித்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்யும் தவறுகளை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவை எடுத்து அண்ணன் ஓபிஎஸ் தலைமையை ஏற்பார்கள்.

பதவி என்பது தோளில் போட்ட துண்டு போல. எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் போட்டு விடலாம். ஆனால், கட்சியும், கட்சியின் கொள்கை என்பது, இடுப்பில் கட்டும் வேட்டி போன்றது. மானம், மரியாதை மிக்கது. அந்த மானம், மரியாதை காப்பாற்ற தான் அண்ணன் ஓபிஎஸ் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த புரட்சி பயணத்தில் கோவைக்கு அண்ணன் ஓபிஎஸ் வருகின்ற பொழுது, எத்தனை பேர் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் எல்லாம் பார்க்க தான் போகிறீர்கள். தற்போது அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். கோவை நிகழ்ச்சி வரும்போது அனைத்தும் முடிவுக்கு வரும்." என்று கோவை செல்வராஜ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai selvaraj say about ops support MLAs count


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->