கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், சற்றுமுன் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.!
kovai teacher mithun sakkaravarthi arrest in kundas
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் இருந்து வெளியேறி வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்துகொள்ள சின்மயா பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தான் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
மேலும், இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும், அவர் பேசும் போன் உரையாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஆர்.எஸ்புரம் காவல்நிலைய போலீசார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முக்கிய காரணமான அந்த பள்ளியில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் ஏற்கனவே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி சிறையிலிருந்து வரும் நிலையில், தற்போது தமிழக போலீசார் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை அந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்துகொள்ள சின்மயா பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. மேலும் அந்த கொடூர ஆசிரியரின் உரையாடல்களும் வெளியாகியது.
இதனையடுத்து ஆர்.எஸ்புரம் காவல்நிலையத்தில் இந்த தற்கொலை வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
மேலும், மாணவி தற்கொலை விவகாரத்தில் சின்மயா பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், பெங்களுரில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர்.
English Summary
kovai teacher mithun sakkaravarthi arrest in kundas