#கோவை | புரோட்டா சாப்பிட்ட ஐடி ஊழியர் சுருண்டு விழுந்து பலி! - Seithipunal
Seithipunal


கோவை மாநகர் : தெலுங்கு வீதி பகுதியை சேர்ந்த சுருளி ஆண்டவர் மகன் சூர்யா பாண்டியன். 25 வயதாகவும் இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், புரோட்டா உண்ட சூர்யா பாண்டியன், மூச்சு திணறி சுருண்டு விழுந்து பலியாகிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவம் நடந்த அன்று, அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் கடையில் சூர்யா பாண்டியன் புரோட்டா வாங்கி வந்து, வீட்டில் சாப்பிட்டார். 

சாப்பிட்டு முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்த சூர்யா பாண்டியனுக்கு, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். 

இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள், உறவினர்களின் உதவியுடன் சூர்யா பாண்டியனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதினர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், சூர்யா பாண்டியன்  ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சூர்யா பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai telungu street suriya death case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->