களத்தில் எதிரிகளே இல்லை... தைரியம் இருந்தால் அண்ணாமலை நிற்கட்டும்.. கே.எஸ் அழகிரி சவால்..!!
KSAlagiri challenged BJP is ready to contest in Erode east byelection
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களை எதிர்க்க அண்ணாமலைக்கு தைரியம் உள்ளதா..!?
கடலூர் கடலூர் மாவட்டத்தை அடுத்த நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்ணியமாக காங்கிரஸ் கட்சியை அழைத்து காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால் அதிமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் போட்டியிட தமாகாவுக்கு தான் வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். தற்பொழுது வரை இந்த தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணியில் யார் போட்டியிடுவது என்று அறிவிக்கவில்லை. அதிமுக நான்கு பிரிவுகளாக தாங்கள் நிற்போம் என சொல்கிறார்கள். தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சி என்று கூறும் அண்ணாமலை ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களை எதிர்த்து நிற்க தயாரா...? அவர்களுக்கு தைரியம் இருந்தால் எங்களை எதிர்த்து நிற்கட்டும் என சவால் விடுகிறேன்.
எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான் என்று அண்ணாமலை சொல்லி வருகிறார். அதனால் தான் நாங்கள் ஒரு காகிதத்தில் ஒரு புள்ளி என்று பாஜகவை சொல்கிறோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவன் அவர்களை மதசார்பற்ற கூட்டணியின் ஆதரவோடு மகத்தான வெற்றி பெற வைப்போம் என களத்தில் நிற்கிறோம். ஆனால் எங்கள் களத்தில் எதிரிகளே இல்லை" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
English Summary
KSAlagiri challenged BJP is ready to contest in Erode east byelection