திமுகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி.!! அதிரும் திமுக வட்டாரம்.!! பின்னணியில் அதிமுக.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய் கண்ணன் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்ட நாமக்கல் மேற்கு  மாவட்ட திமுகவின் சுற்றுச்சூழல் அணி தலைவராகவும் குமாரபாளையம் நகர மன்ற சேர்மனாகவும் பதவி வகித்து வரும் விஜய் கண்ணன் தற்போது அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய் கண்ணன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் "திறமையானவர்கள் பதவிகளை மறுத்தால் அதன் பின் முட்டாள்களால் ஆளப்படுவது தான் அவர்களின் தலைவிதி.." என வைத்திருந்தது சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது திறமையற்றவர்களுக்கு பதவி வழங்கப்படுவதாக பொருள்படும் வகையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.

இதற்கு காரணம் குமாரபாளையம் திமுக நகர செயலாளர் பதவியை விஜய் கண்ணன் கேட்டபோது திமுக தலைமை அதை வழங்க மறுத்ததாகவும், அதேபோன்று நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பதவி கேட்டபோதும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சாதாரண பதவியான திமுக சுற்றுச்சூழல் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த விஜய் கண்ணன் அந்தப் பதவியில் இருந்து விலகியதோடு தற்போது அதிமுகவை சேர்ந்த குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான தங்கமணியுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் விஜய் கண்ணனிடம் ஆலோசனையில் இறங்க வேண்டாம் என்று நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செந்தில் சமாதானம் செய்யும் முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிக்குட்பட்ட பல திமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகிய அதிமுகவில் கடந்த சில நாட்களாக இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumarapalayam DMK chairman is going to join AIADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->