நான் எழுதி கொடுத்த ‘கேள்விகளை மட்டும் கேளுங்க’ - துண்டு சீட்டுடன் திமுக எம்.பி. பிரஸ் மீட்!
Kumbakonam DMK MP Press meet
கும்பகோணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சந்திப்புக்கு முன், பத்திரிகையாளர்களிடம் துண்டுசீட்டுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்ட கேள்விகளையே கேட்குமாறு எம்.பி. தரப்பினர் அறிவுறுத்தினர். இதனால், ஊடகவியலாளர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
அந்த துண்டு சீட்டில்:
1.உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பற்றி?
2. ஆளுநரின் அடாவடி போக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
3. மும்மொழிக் கொள்கையை திமுக எதற்கு ஏற்றுக்கொள்ளவில்லை
4. உச்சநீதிமன்றமே 10 மசோதாக்களுக்கு அனுமதி அளித்தது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் மீறி, சில பத்திரிகையாளர்கள் வேறு கேள்விகளை எழுப்ப முயன்றபோது, எம்.பி. கல்யாணசுந்தரம் பதிலளிக்க முடியாமல் தடுமாறியதாக கூறப்படுகிறது. இந்த காட்சி நிகழ்வில் இருந்தவர்களை திடுக்கிட்டுள்ளது.
நேர்மையான கேள்விகளுக்கு தயங்கிய எம்.பி.யின் இந்த நடத்தை, ஊடக சுதந்திரத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
அதேவேளை, பத்திரிகையாளர் சந்திப்பு என்பது இருதரப்பு உரையாடலுக்கான மேடையாக இருக்கவேண்டுமேயன்றி, கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வாக இல்லையென பலரும் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Kumbakonam DMK MP Press meet