கும்பகோணம் மருத்துவமனை குப்பை தொட்டியில் பைபிள் வீசிய விவகாரம்: இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கைது! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் மருத்துவமனை குப்பை தொட்டியில் பைபிள் வீசிய விவகாரம்: இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கைது!

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வைத்திருந்த பைபிள் புத்தகங்களை பறித்து, குப்பை தொட்டியில் வீசியதாக இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் குரு மூர்த்தி மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை போன்ற அமைதியான இடத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறுவது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கும் செயல் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சமூக ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக, குரு மூர்த்திக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே இந்து மக்கள் கட்சி விடுத்த கண்டன அறிக்கையில், "இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் குடந்தை குருமூர்த்தி அவர்கள் இன்று 27/03/2025 வியாழன் காலை 12 மணிக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சட்டவிரோத மோசடி மதமாற்ற முயற்சிகளை அமைதியான முறையில் சட்டத்திற்கு உட்பட்டு முறியடித்துள்ளார்.

சட்டவிரோதமாக அனுமதி இன்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து கிறிஸ்தவ மதப் பிரச்சார துண்டு பிரசுரங்கள் மற்றும் பைபிள் விநியோகம் மூன்று கிறிஸ்தவ பெண்கள் செய்துள்ளார்கள். 

இந்த சட்டவிரோத செயலை மோசடி மதமாற்ற முயற்சியை தடுக்கும் விதமாக மருத்துவமனைக்குச் சென்ற திரு குருமூர்த்தி அவர்கள் கிறிஸ்துவ மத போதக பெண்களால் விநியோகம் செய்யப்பட்ட மதப் பிரச்சார நூல்களை நோயாளிகளிடம் வாங்கி ஏமாற வேண்டாம் என்று கோரிக்கை வைத்து அந்த நூல்களை அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார்.

கும்பகோணம் நகர காவல் துறை அனுமதி இன்றி மதப் பிரச்சாரம் செய்த மதப் பிரச்சார துண்டு பிரசுரங்களை விநியோகித்த கிறிஸ்தவ பெண்களை கைது செய்யாமல் அமைதியான முறையில் நோயாளிகளிடம் அணுகி அந்தப் புத்தகங்களை திரும்பப்பெற்ற குருமூர்த்தி அவர்களை கைது செய்து சட்ட விரோதமாக காவல் நிலையத்தில் வைத்துள்ளார்கள்.

காவல்துறையினர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளும், மேற்படி நிகழ்ச்சியை படம் பிடித்த செய்தியாளர்களும், உண்மை நிலையை தெளிவுபடுத்துகிறது.

இந்நிலையில் குடந்தை குருமூர்த்தி அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சட்டவிரோத காவலில் வைத்திருப்பது அநீதியாகும். 

ஏற்கனவே காவல்துறை அனுமதி பெற்று குடந்தையில் அந்தணர் பாதுகாப்பு பேரணி மற்றும் மாநாடு வெற்றிகரமாக மக்கள் ஆதரவுடன் நடத்தப்பட்டுள்ளது. அதற்காக பழிவாங்கும் உள்நோக்கத்துடன் குருமூர்த்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் குருமூர்த்தியை கைது செய்துள்ளார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

குருமூர்த்தி அவர்களை விடுதலை செய்யக்கோரி, பொய் வழக்குகளை வாபஸ் பெற கோரி; அரசு மருத்துவமனையில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதப் பிரச்சாரம் செய்தவர்களை கைது செய்யக்கோரி, இந்து அமைப்புகள் ஒருங்கிணைந்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம். 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இது விஷயத்தில் நேரடியாக கவனம் கொடுத்து குடந்தை குருமூர்த்தி அவர்களை விடுதலை செய்யும்படியும் கும்பகோணத்தில் பதட்டத்தை தவிர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் வேண்டுகிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kumbakonam IMK member arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->