பட்டியலின சாதி வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட ஆணவ படுகொலை.?! கப்-சிப் திருமா, காணாமல் போன அட்டகத்தி ரஞ்சித்.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் அருகே உள்ளது துளுக்கவெளி. இந்த கிராமத்தை சேர்ந்த பட்டியில் இன வகுப்பை சேர்ந்தவர் என்று சொல்லப்படும் சரண்யா (24 வயது) என்பவரும், திருவண்ணாமலை மாவட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோகன் (31 வயது) என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த மாதம் சரண்யாவின் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வரவே, காதலன் மாற்று சமூகம் என்பதால் அவரின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பவருக்கு சரண்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, திருவண்ணாமலை சென்று மோகனை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சென்னையில் வசித்து வந்த அவர்களை, விருந்து வைக்க உள்ளதாக சகோதரர் சக்திவேல் வரவழைத்துள்ளார்.

அண்ணன் மேல் உள்ள பாசத்தால் நம்பி வந்த சரண்யா மற்றும் அவரின் காதல் கணவர் மோகன் இருவரும், சக்திவேல் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டு வாசலில் வைத்து இருவருக்கும் சக்திவேல் தண்ணீர் கொடுத்துள்ளார். இருவரும் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே, சக்திவேல் மற்றும் அவரின் மைத்துனர் ரஞ்சித் ஆகியோர் புதுமண தம்பதிகளை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சக்திவேல் மற்றும் ரஞ்சித் கும்பகோணம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளமான டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் இந்த ஆணவ படுகொலைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. 

'சாதிமறுப்புத் திருமணம் தான், சாதி ஒழிப்புக்கு அடித்தளம்' என்ற கொள்கையைப் பரப்பி வரும் திருமாவளவன், கி வீரமணி, பா ரஞ்சித் மேலும் சில புரட்சிப் போராளிகள், தற்போது இந்த ஆணவ படுகொலை சம்பவத்தில் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சாதிய ஆணவப்படுகொலை செய்தவர்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதாலா? பட்டியல் இனத்தில் உள்ள சாதி வெறியை பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? என்று நேரடியாக அவர்களை டேக் செய்து கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று நடந்து விட்ட நிலையில், எந்த ஒரு செய்தி தொலைக்காட்சிகளும் இதனை சாதிய ஆணவப்படுகொலை என்று சொல்ல மறுக்கிறது ஏன்? என்றும், படுகொலை நடந்து ஒரு நாட்களாகியும் சாதிய ஆணவ படுகொலையை எதிர்த்து பேசும் திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் சாதிய ஆணவப்படுகொலை செய்யலாம் என்று சொல்ல வருகிறார்களா? என்ற கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumbakonam sathiya aanava padukolai issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->