எல்.முருகன் மீது வழக்கு பதிவு..தேர்தல் விதிமுறைகளை மீறினாரா எல்.முருகன்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கானஅட்டவணையை கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி அறிவித்தது தேர்தல் ஆணையம். தேர்தலை முன்னிட்டு பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. பிரச்சாரம் முடிந்த நிலையில் யாரேனும் பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை என்று உத்தரவிட்டிருந்தது தேர்தல் ஆணையம். நீலகிரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் எல்.முருகன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மேட்டுப்பாளையம் பகுதியில் இருசக்கர பேரணியில் சென்றதால், எல் முருகன் மீதும்  33 பாஜக நிர்வாகிகள் மீதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

L murugan break election rules


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->