இது போலி சமூகநீதி! சேலம், வேங்கைவயல் சம்பவங்களை சுட்டிக்காட்டி திமுகவை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர் எல் முருகன்! - Seithipunal
Seithipunal


சேலம், வேங்கைவயல் சம்பவங்களை மேற்கோள் காட்டி ஆளும் திமுக அரசை போலி சமூகநீதி அரசு என்று, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விமர்சித்துள்ளார்.

மேலும், திராவிட மாடல் ஆட்சியில் பட்டியல் இனத்தை சேர்ந்த அமைச்சர் கடைசி இடத்தில் தான் இருக்கிறார் என்றும், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விமர்சித்துள்ளார்.

சென்னை தி.நகரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், விழாவில் பேசியதாவது,

"சேலம் பகுதியில் பட்டியலின ஊராட்சி மன்றத்தலைவர் குடியரசு தினத்தில் கொடியேற்ற முடியவில்லை. வேங்கைவயலில் குடிநீரில் மனிதக்கழிவை கலந்தவர்கள் கைது செய்யப்படவில்லை. இதுதான் போலி சமூகநீதி.

பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த அமைச்சர்கள் முக்கிய பொறுப்பு வகுத்து வருகின்றனர். ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கடைசி இடத்தில் தான் உள்ளனர்.

அதிலும், குறிப்பாக தமிழகத்தில் சமூக நீதிப் பேசும் இந்த திராவிட மாடல் ஆட்சியில், பட்டியல் இன அமைச்சர் கடைசி இடத்தில் தான் இருக்கிறார். 

ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் பட்டியல் இனத்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகளும் வழங்கப்படுவதில்லை" என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விமர்சித்து பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

L Murugan Say About DMK And DMK Govt Social Justice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->