கங்கனாவை அறைந்த பெண் காவலருடன் ராகுல் காந்தி...!! தீயாய் பரவும் புகைப்படம்..! - Seithipunal
Seithipunal


நடிகையும், பாஜகவின் மண்டி தொகுதி எம். பி.யுமான கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாக இருந்தது. 

பஞ்சாப்  மற்றும் ஹரியானா விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா கூறியதால் தான் அவரை கன்னத்தில் அறைந்ததாக அந்த பெண் காவலர் கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு எம். பி. யை கன்னத்தில் அறைந்ததாக கூறி அந்த பெண் காவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் கைதும் செய்யப்பட்டார்.

இதையடுத்து அந்த பெண் காவலருக்கு ஆதரவாக விவசாயிகள் பேரணி நடத்தினர். இந்நிலையில் தற்போது இவள் தான் குல்விந்தர் கவுர்.. இவள் தான் கங்கனா கன்னத்தில் அறைந்தவள்..இப்போது தெரிகிறதா இதற்கு காரணம் யார் என்று ..? என்று பதிவிடப்பட்டு ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருடன் ஒரு பெண் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அந்த புகைப்படம் ராஜஸ்தானின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ திவ்யா மதர்னா காங்கிரஸ் தலைவர்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தை தான் சில விஷமிகள் குல்விந்தர் கவுர் ராகுலுடன் இருக்கும் புகைப்படம் என்று போலி செய்தியை பரப்பி வருகின்றனர் என்று முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ திவ்யா மதர்னா விளக்கம் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lady CISF Police Who Beats Gangana Ranaut is with Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->