பாஜகவுக்கு தேர்தல் காய்ச்சல்! பொது சிவில் சட்டத்தை கைவிடுகிறதா மத்திய அரசு? மசோதாக்களின் பட்டியல் இதோ.!! - Seithipunal
Seithipunal


நடபாண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நாளை கூட உள்ள நிலையில் இன்று டெல்லியில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 34 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 44 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரில் 17 அமர்வுகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள சட்ட மசோதாக்களின் உத்தேச பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

1) டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்தின் அரசாங்கம் மசோதா, 2023.

2) ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா, 2019.

3) டி.என்.ஏ தொழில்நுட்பம் பயன்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2019.

4) மத்தியஸ்த மசோதா, 2021.

5) உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா, 2022.

6) மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, 2022.

7) ரத்து மற்றும் திருத்த மசோதா, 2022.

8) ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2023.

9) வன (பாதுகாப்பு) திருத்த மசோதா, 2023.

10) அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (மூன்றாவது திருத்தம்) மசோதா, 2022 (இமாச்சலப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்த வரை)

11)அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (ஐந்தாவது திருத்தம்) மசோதா, 2022 (சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்த வரை)

12) அஞ்சல் சேவைகள் மசோதா, 2023.

13) தேசிய கூட்டுறவு பல்கலைக்கழக மசோதா, 2023.

14) பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் (திருத்தம்) மசோதா, 2023.

15) டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, 2023.

16) சர்வதேச நாணய நிதியம் மற்றும் வங்கி மசோதா, 2023.

17)தற்காலிக வரி வசூல் மசோதா, 2023.

18) தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, 2023.

19) தேசிய நர்சிங் மற்றும் மருத்துவச்சி ஆணைய மசோதா, 2023.

20) மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் மசோதா, 2023.

21) பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா, 2023.

22) ஜம்மு மற்றும் காஷ்மீர் இட ஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023.

23) ஒளிப்பதிவுத்துறை மசோதா, 2023.

24) பத்திரிக்கைகள் மற்றும் பதிவுசெய்தல் மசோதா, 2023;

25) வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா, 2023;

26) சுரங்கங்கள் மற்றும் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2023.

27) ரயில்வே (திருத்தம்) மசோதா, 2023.

28) தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, 2023.

29)அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியலிடப்பட்ட சாதிகள் ஆணை (திருத்தம்) மசோதா, 2023.

30) அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை (திருத்தம்) மசோதா, 2023.

31) அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் ஆணை (திருத்தம்) மசோதா, 2023.

மேற்கண்ட மசோதாக்களை மத்திய அரசு நடப்பு மழைக்கால கூட்ட தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெளியான உத்தேச மசோதாக்கள் பட்டியலில் பொது சிவில் சட்ட மசோதா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் அதனை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்வதை மத்திய பாஜக அரசு கைவிட்டு இருக்கக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

List of 31 bills to be tabled in monsoon session


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->