தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு? அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்! - Seithipunal
Seithipunal


அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக இந்த மக்களவைத் தேர்தலில் பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் தனித்து மூன்றாவது கூட்டணியை அமைத்தது. 

மேலும் தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று, வாக்கு சதவீதத்தில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக தன்னை நிலை நிறுத்தும் என்று, பாஜகவின் அண்ணாமலை தெரிவித்துருந்தார்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் பகல் ஒரு மணி நிலவரப்படி பாஜக கூட்டணியில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறார். மீதமுள்ள 38 தொகுதிகளில் பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றன.

இதேபோல் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக விருதுநகர் தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறது. மற்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டாவது இடம் யாருக்கு என்ற விவரம் வெளியாகியுள்ளது. பகல் ஒரு மணி நிலவரப்படி 39 தொகுதிகளில்... 

28 தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இரண்டாவது இடம் பிடித்துள்ளன. 
10 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தைப் பொறுத்தவரை ஒன்பது இடங்களில் அதிமுக கூட்டணி மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. 
பாஜக கூட்டணி 25 இடங்களில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. 
இதில் யாரும் எதிர்பாராத விதமாக நாம் தமிழர் கட்சி ஆறு தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்து உள்ளது. மேலும், 

அதிமுக இரண்டு தொகுதிகளில் நான்காவது இடமும், 
பாஜக நான்கு தொகுதிகளில் நான்காம் இடமும்,
நாம் தமிழர் கட்சி 34 தொகுதிகளில் நான்காம் இடம் பிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Election 2024 ADMK BJP PMK NTK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->