கடும் நெருக்கடியில் மோடி! முக்கிய நிபந்தனைகளை முன்வைக்கும் கூட்டணி கட்சிகள்! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சற்று முன்பு டெல்லியில் தொடங்கியுள்ளது. 

மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெறாத நிலையில், மீண்டும் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவைகள் இடம் அளிப்பது குறித்தும் ஆலோசனை மற்றும் விவாதம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பீகார் முதல்வர் நித்திஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

இதற்கிடையே வெளியான ஒரு தகவலின் படி ஜனதா தல் கட்சியின் தலைவரும், பிகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் பாஜக மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால், பல முக்கிய நிபந்தனங்களை முன் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடுவும்  முக்கிய நிபந்தனை ஒன்றை முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஜே.டி.எஸ். கட்சியின் தலைவருமான குமாரசாமி தங்களது கட்சிக்கு மத்திய அமைச்சரவையில், வேளாண் அமைச்சகத்தை ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அமைச்சரவையில் இடங்களை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும் மக்களவை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில், கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவது குறித்தும் பாஜக என்ன முடிவு எடுக்கும் என்று எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. மேலும் துணை பிரதமர் உள்ளிட்ட பதவிகள் புதிதாக ஏற்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LOk Sabha Election 2024 NDA Meet BJP Modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->