#JustIn: நாடாளுமன்ற இரு அவைகளிலும் வெடித்த சர்ச்சை.! துவங்கிய ஒரே நிமிடத்தில் ஒத்திவைப்பு.!   - Seithipunal
Seithipunal


குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசிய வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இது பற்றி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்கள் செய்தும், ஆர்ப்பாட்டங்களை அறிவித்தும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சாலை மறியல், கடை அடைப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இத்தகைய நிலையில் சமீபத்தில் தமிழக சட்டப்பேரவைக்குள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து இன்று கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார்கள். அந்த வகையில் தற்போது ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தின் அவையில் முழக்கம் எழுப்பினர்.

இந்த நிலையில் அவை துவங்கிய ஒரு நிமிடத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மக்களவை மாலை 4 மணி வரைக்கும் மற்றும் மாநிலங்கள் அவை மதியம் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok sabha postponed about Congress MPs protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->