தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் உள்ள லோக்சபா தொகுதிகள் அதிகரிக்ககூடும்; பாதுகாப்பு அமைச்சர் உறுதி..!
Lok Sabha seats in Tamil Nadu may increase in constituency reshuffle Defence Minister confirms
2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தானது தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் உள்ள லோக்சபா தொகுதிகள் அதிகரிக்ககூடும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் அதேநேரத்தில் வட இந்திய மாநிலங்களில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மற்ற மாநில முதல்வர்களுக்கும் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இதனயடுத்து ,முதல்வர் ஸ்டாலினின் பயத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆறுதலாக கூறியதாவது:
''இந்த செயல்முறை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இடங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.வரையறை திட்டமிட்டபடி தொடர வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஸ்டாலினுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அவர் சுதந்திரமாக கூறலாம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசிப்பார்கள். நீதித்துறை இறுதி முடிவை எடுக்கும்.'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ''சட்டசபையாக இருந்தாலும் சரி, லோக்சபாவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாநிலத்திலும் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு இடங்களின் எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கும் என்பதை அனைவரும் உறுதியாக நம்ப வேண்டும். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவும் அதிகரிப்பைக் காணும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வட இந்தியா மட்டுமே பயனடையும் என்ற கூற்று நியாயமானது அல்ல.'' என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கூறியுள்ளார்.
English Summary
Lok Sabha seats in Tamil Nadu may increase in constituency reshuffle Defence Minister confirms