மக்களவை தேர்தல் || 100 நிமிடங்களில் நடவடிக்கை.. ராஜீவ் குமார் சொன்ன‌ முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் குறித்து தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடனும் இந்தியா தலைமை தேர்தல் ஆணையர் ராஜூகுமார் இரண் நாள் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலில் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை தமிழகத்தை பொறுத்த வரை ஒரே கட்டமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க மொபைல் ஆப் உள்ளது எனவும், சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். புகார் அளித்த 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  17 மாவட்டங்களில் உள்ள 145 எல்லைப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Loksabha election in tamilnadu at a time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->