அமைச்சர் மீதான ஊழல் வழக்கு.. நாள் குறித்து, அதிரடியாக களமிறங்கிய நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal



ஊழல் மற்றும் சொத்து குவிப்பு வழக்குகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய அமைச்சர்கள்  மீதானா 6 வழக்குகளை சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்தார்.  அதன்படி முன்னாள் முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், பா.வளர்மதி,   திமுக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோர் மீதான வழக்குகள் மறு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.


கிழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாததை அடுத்து தாமாக முன்வந்து மறு  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்து இருந்தார்.

மேலும் இந்த வழக்குகளின் மீது பதிலளிக்குமாறு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக அரசு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதில் அளிக்குமாறு உத்தரவிடபட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை சரிதான் என கூறி அனைத்து முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இந்நிலையில் தான் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல்வாதிகளின் வழக்குகளால் பிற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல்  நாள்தோறும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணை தொடங்கும் எனவும்,

முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்குகள் 5ஆம் தேதி முதல் விசாரணை நடத்தப்படும் எனவும், திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு பிப்ரவரி 12மற்றும்  13 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும்,முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC announced daily hearings cases against ministers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->