பொன்முடி சொத்துக்களை முடக்க தேவையில்லை.!! அனால்.!? ட்விஸ்ட் வைத்த நீதிபதி..!! - Seithipunal
Seithipunal


வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னைஉயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்ததாகவும் நேற்று வழங்கிய தனது தீர்ப்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பொன்முடியில் சொத்துக்களை முடக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பொன்முடியின் சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும், தற்போது அதை மாற்ற முடியாது. தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பொன்முடி தரப்பு நிம்மதி அடைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madrashc verdict no need to freeze properties in Ponmudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->