நாடாளுமன்றத்திற்குள்ளேயே தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போகிறதாம் - மதுரை எம்பி விமர்சனம்! - Seithipunal
Seithipunal


ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட மசோதா இன்று (டிசம்பர் 17) மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மூலம் தாக்கல் செய்யப்பட்டது.  

இதை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன; ஆனால் தெலுங்கு தேசம் உள்ளிட்ட 19 மாநில காட்சிகள் ஆதரவு தெரிவித்தன.  

இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப பரிந்துரைக்க, அதற்கான வாக்கெடுப்பில் 269 எம்.பிக்கள் ஆதரவாகவும், 198 எம்.பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மையுடன் மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து மக்களவை மதியம் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.

ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது.

ஒரே தேசம் ஒரே தேர்தல் ஜனநாயகம், கூட்டாட்சி, மக்கள் கருத்து ஆகிய மூன்றின் அடிப்படையையும் அறுத்தெரியும் சட்ட வரைவு. 

“ஒரே தேர்தல்" என்பது தேர்தலையே ஒழிக்கும் பாசிச மனோபாவம் என்பதை அம்பலப்படுத்துவோம்! ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்டும் இரக்கமற்ற தாக்குதலில் இருந்து இந்தியாவை காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maduai MP Condemn to BJP Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->