INDvsAUS: டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறப்பே போராடுவதுதான். அந்த வகையில் இன்றை நாள் மிக சிறப்பு! வைரல் வீடியோ! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்திலிருந்து தப்பியதை கோலி மற்றும் ரோஹித் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.  

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நான்காவது நாள் தொடக்கத்தில் ரோஹித் ஆட்டமிழந்த நிலையில், கே.எல். ராகுல் (84) மற்றும் ஜடேஜா (77 ரன்கள்) சிறப்பாக விளையாடினார்கள்.  

ஆட்டத்துக்கு மழை தொடர்ந்து தடங்கல் ஏற்படுத்தியது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. இறுதியில் பும்ரா (10 ரன்கள்) மற்றும் ஆகாஷ் தீப் (27 ரன்கள்) அதிரடி ஆட்டத்தால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.  

4ஆவது நாள் முடிவில் இந்திய அணி 252/9 என்ற நிலையில் இருந்தது. ஃபாலோ ஆன் தப்பியதற்காக கோலி, பயிற்சியாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கம்மின்ஸ் ஓவரில் ஆகாஷ் தீப் பவுண்டரி, சிக்ஸர் அடித்து இந்திய ரசிகர்களை மட்டுமல்லாம் ஆஸ்திரேலிய ரசிகர்களையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறப்பே போராடுவதுதான். அந்த வகையில் இன்றை நாள் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS Test Cricket viral video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->