ரஷ்யாவை பதறவைத்த குண்டுவெடிப்பு! முக்கிய தலைவர் பலி! பின்னணியில் உக்ரைன்?! - Seithipunal
Seithipunal


ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று குடியிருப்பு கட்டடம் அருகே நடந்த குண்டுவெடிப்பில், ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளின் தலைவர் இகோர் கிரில்லோவ் உயிரிழந்தார்.  

மாஸ்கோவில் ரியாசான்ஸ்கி அவென்யூவில் குடியிருப்பு கட்டடத்தின் நுழைவாயிலில் எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில், கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் உடனடியாக கொல்லப்பட்டதாக ரஷிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  

சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இடிபாடுகளால் சேதமடைந்த கட்டிட நுழைவாயில் மற்றும் பனியில் இரத்தக் கறை படிந்த உடல்கள் உள்ள புகைப்படங்கள் பகிரப்பட்டன.  

சமீபத்தில், உக்ரைன் மீது தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கிரில்லோவுக்கு குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், அவரது கொலைக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு (SBU) காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பைனான்சியல் டைம்ஸ் இதழ், கிரில்லோவ் போர்க்குற்றவாளி என்பதால், அவரை இலக்காக எடுத்தது முறையானது என உக்ரைன் கருதுவதாக குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Moscow Bombing chemical weapons Ukraine 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->