குடும்பத்தில் பிரச்சனை உண்டாக்க பார்க்கிறீர்கள் - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதன் விவரம் பின்வருமாறு, ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற காணொளியை பதிவு செய்ததும், நீக்கியதும் திருமாவளவன் தான். எனவே அந்த இரண்டு கேள்விகளுக்கும் அவர்தான் பதில் சொல்ல வேண்டும். 

என்னை பொறுத்தவரை யார் கேள்வி கேட்டார்களோ? யார் அந்த கேள்வியை வாபஸ் பெற்றார்களோ? அவர்கள் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். 

மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் பொதுவாக தான் அழைப்பு கொடுத்துள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி முடிவெடுப்போம். 

இதற்கான பூர்வாங்க நடவடிக்கை எடுக்கும் போது உங்களுக்கு பதில் கிடைக்கும். தமிழகத்தில் மது இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. 

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தால் உண்மையிலேயே முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டால் நான் கண்டிப்பாக வரவேற்பேன்.

அதிமுகவில் இருந்து பிரிந்த சக்திகள் மீண்டும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். அதற்கான சூழ்நிலை இருக்குது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்கள் "உங்கள் குடும்பத்தில் இருந்த உங்களுடைய இளைய மகன் அரசியலுக்கு வருவாரா" என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், எங்கள் குடும்பத்தில் பிரச்சனை உண்டாக்க பார்க்கிறீர்கள். அதற்கு நான் இடம் கொடுக்க மாட்டேன் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Airport OPS Press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->