#Breaking || வசமாக சிக்கிய சவுக்கு சங்கர்.. 6 மாத சிறை தண்டனை.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
madurai court judgement about savukku shankar case
யூடுபரான சவுக்கு சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் குறித்து அவதூறாக கருத்து பதிவு செய்திருந்தார். அத்துடன் நீதித்துறை அனைத்தும் ஊழலில் சிக்கி உள்ளதாக பேசினார்.
இது குறித்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரித்தது. அப்பொழுது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உங்கள் மீது ஏன் தொடரக்கூடாது என்று சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என சவுக்கு சங்கர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை கடந்த எட்டாம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் எட்டாம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் அவகாசம் வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, "தெரியாமலா பேசினீர்கள்? பேட்டி கொடுத்த உங்களுக்கு தெரியாதா? அனைத்தையும் மறந்து விட்டீர்களா?" என்று நீதிபதிகள் சவுக்கு சங்கரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து, இனி ஊடகங்களில் இதுபோன்று பதிவுகளை செய்ய மாட்டேன் என்று நீதிபதி உறுதி அளிக்க கேட்டுள்ளார்.
ஆனால் சவுக்கு சங்கர் அப்படி என்னால் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இது குறித்த விசாரணை முடிந்து தீர்ப்புக்கு முன் சிறிய இடைவெளி கொடுக்கப்பட்டது.
அப்பொழுது சவுக்கு சங்கர் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற முயற்சித்த போது போலீசார் அவரை வெளியில் செல்ல அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
madurai court judgement about savukku shankar case