கஞ்சா குடிக்கிகளுக்கு வக்காலத்து வாங்கிய திருமாவளவனின் சாதி வெறித்தனம்.! கிராம மக்கள் மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்.!
MADURAI MELUR VCK WORST
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த 17 ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில், "மதுரை, மேலூர் அருகே பழையூர்பட்டியில் பொங்கல் கொண்டாடியதற்காக சாதிவெறியர்கள் ஆதிதிராவிடர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளனர். இந்தக் கேவலமான சாதிவெறியாட்டத்தை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இத்தாக்குதலில் காயமடைந்தவர்களை இசிஎபா மாநிலச்செயலாளர் சங்கத்தமிழன் மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் சந்தித்து நடந்ததை விசாரித்ததுடன் ஆறுதல் கூறியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் உடனே கைது செய்ய வேண்டுமென விசிக சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், விவகாரம் தற்போது வேறுவிதமாக நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆம், கஞ்சா குடித்தவர்கள் செய்த அராஜகம் இந்த சம்பவத்தின் பின்னாளில் இருப்பது தெரியவந்துள்ளது.
நடந்த சம்பவம் குறித்து அந்த கிராம மக்கள் வெளியிட்டுள்ள செய்தி என்னவெனில், "மதுரை மாவட்டம், மேலூர் பழையூர்பட்டியில் நடந்த முழு சம்பவத்தில், காவல்துறை மற்றும் விசிகவினர் ஒன்று சேர்ந்து,
விசிக கட்சியின் கஞ்சா வியாபாரியை காப்பாற்ற சாதிய மோதலாக திரிக்கின்றனர்.
கஞ்சா அடித்து மற்றும் கத்தியுடன் வந்து வழியில் செல்லும் ஆண் பெண் விவசாயிகள் அனைவரையும்
வம்பிழுத்தவர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்களின் மிதே வன்கொடுமை சட்டத்தில் மீது கைது செய்ய விடுதலை சிறுத்தை கட்சியினர் முயற்ச்சித்து, சாதிய மோதல்களை உருவாக்குகின்றனர்.
மேலும், சம்பவ இடத்தில் நடந்த உண்மையை மறைத்து புறம்பான ஜோடிப்பு வழக்காக மாற்ற முயல்கின்றனர்.
குற்றவாளி கொண்டுவந்த கத்தி இருக்கும் போதும் கூட, இவர்கள் கட்சி முன் பகை காரணமாக பொய்யாக சாதிய மோதலாக திசை திருப்புகின்றனர்.
முழுக்க முழுக்க விசிக வின் சதி செயல் ஆதாரம் வீடியோ:
மேலும் காவல் துறையினரே வழக்குகளை ஜோடித்து குற்றத்தில் ஈடுபடாத பல பெயர்களையும் இணைத்துள்ளனர். அதை காவல்துறை அதிகாரியே குறிப்பிடுகின்றார். பொய் வழக்கை ஜோடித்து
விசிக ஆதரவாக செயல்படும் காவல் துறையின் செயல்பாடுகள் விரைவில் போராட்டம் தொடங்கப்படும்" என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.