தேசிய கல்விக் கொள்கை – தமிழகத்துக்கான நிதி நிறுத்தம் குறித்து மதுரை எம்.பி கடும் விமர்சனம்!
Madurai MP Su Vengadesan Condemn to BJP Govt
மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதிலளித்தார். அதில்,
👉 தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள குழந்தைகளுக்குக் கல்வியைச் சேர்ப்பதே நோக்கம்.
👉 2023-24ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு ₹1,876 கோடி நிதி வழங்கப்பட்டது.
👉 2024-25ஆம் ஆண்டில் ₹4,305 கோடி நிதிக்கு திட்ட ஒப்புதல் குழு அனுமதி அளித்துள்ளது.
👉 மும்மொழிக் கொள்கை கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கிறது; எந்த மொழியும் திணிக்கப்படாது.
👉 மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்து கற்கலாம்.
இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்:
❌ கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கு அமைச்சர் ஏற்கனவே உள்ள உண்மைகளை மறைத்து பதிலளிக்கிறார்.
❌ தமிழகம் தேசிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதால்தான் நிதி நிறுத்தப்பட்டது – இது மறைக்கப்பட்டிருக்கிறது.
❌ மக்களை ஏமாற்றும், இந்தித் திணிப்பை மறைமுகமாகச் செயல்படுத்தும் திட்டம்.
❌ தமிழக பாஜக தலைவர்கள் தினந்தோறும் இந்தித் திணிப்பை நியாயப்படுத்திப் பேசுகின்றனர்.
❌ மத்திய அரசு ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வித் துறையில் தன்னிச்சையாக முடிவெடுக்கலாமா?
இவ்வளவு கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்கவில்லை. இதுவே மத்திய அரசின் ஜனநாயக விரோத அணுகுமுறையின் உச்சம் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்தார்.
English Summary
Madurai MP Su Vengadesan Condemn to BJP Govt