மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக கூட்டணி! வெளியானது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்!
Maharashtra assembly election 2024 exit polls result
மகாராஷ்டிரா - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு உண்டான சட்டமன்ற பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலைகள் இன்று 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலைகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.
வெளியான இந்த கருத்து கணிப்புகளின் படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது. கருத்துக்கணிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு.
என்டிடிவி கருத்து கணிப்பு:
பா.ஜ.க. கூட்டணி: 175-195 தொகுதிகள்,
இண்டியா: 85-112 தொகுதிகள்,
இதர கட்சிகள் : 1-8 தொகுதிகள்
ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பு:
பா.ஜ.க. கூட்டணி: 137-157 தொகுதிகள்,
இண்டியா: 126-146 தொகுதிகள்,
இதர கட்சிகள் : 2-8 தொகுதிகள்
நியூஸ் 18 கருத்துக்கணிப்பு:
பா.ஜ.க. கூட்டணி: 154 தொகுதிகள்,
இண்டியா: 128 தொகுதிகள், இதர கட்சிகள் : 6 தொகுதிகள்
ஏபிபி கருத்துக்கணிப்பு:
பா.ஜ.க. கூட்டணி: 150-170 தொகுதிகள், இண்டியா: 110-130 தொகுதிகள்,இதர கட்சிகள் : 8-10 தொகுதிகள் -
English Summary
Maharashtra assembly election 2024 exit polls result