உடைந்தது காங்கிரசின் தேர்தல் நேர கூட்டணி! வெளியேறிய சமாஜ்வாதி கட்சி!
Maharashtra Samajwadi Shiv Sena Babri Masjid
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி (பாஜக கூட்டணி) வெற்றியடைந்து மீண்டும் ஆட்சியில் நீடிக்கிறது.
288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் 3வது முறையாக முதல்வராக பதவியேற்றார். என்சிபி பிரிவு தலைவர் அஜித் பவார், சிவசேனா பிரிவு தலைவர் ஷிண்டே ஆகியோர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ்-உத்தவ் சிவசேனா-சரத் பவார் என்சிபி தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே சிவசேனா செய்தி வெளியிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பாஜகவின் மாரு உருவமாக உள்ள அவர்களுடன் கூட்டணியில் நீடிக்க முடியாது என்றும் மாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி கூட்டணி முறிவுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
English Summary
Maharashtra Samajwadi Shiv Sena Babri Masjid