மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும் - மல்லிகார்ஜுன கார்கே! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஆட்சியமைக்க 272 இடங்களே தேவை என்பதால் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை ஏழு மணியளவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார் மல்லிகார்ஜுன கார்கே.

அப்போது அவர் கூறியதாவது, " மக்களின் தீர்ப்பு மோடியின் அரசியல் முறைக்கு எதிராக இருக்கிறது. இது மோடியின் தனிப்பட்ட அரசியல் தோல்வி. பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு மக்கள் தகுந்த பதிலடி தந்துள்ளனர்.

இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்த மக்களுக்கும், கூட்டணித் தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோடியின் இந்த பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna Karge After INDIA Alliance Meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->