இண்டி கூட்டணிக்கு கல்தா.. மக்களவை தேர்தலில் தனித்து போட்டி.. அதிரடி மம்தாவின் சரவெடி.!! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்த இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு சுமுகமாக முடியவில்லை. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை தர திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து வந்தது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் முஷிதாபாத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பேசிய மம்தா பானர்ஜி மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட போகிறது. அதற்கு தயாராக இருங்கள் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.


அதனை தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி உறுதிப்படுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக மம்தா அறிவித்திருப்பது இந்தியா கூட்டணி காட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காங்கிரஸ் உடனனர தொகுதி பங்கீடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனான கொள்கை ரீதியான முரண்பாடு ஆகியவற்றின் காரணமாக மம்தா பானர்ஜி இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata banarjee contest alone in Lok Sabha elections


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->