மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக.. தற்போதைய முன்னணி நிலவரம்.!
Manipur state assembly election results
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டியாக களம் இறங்கியது. மேலும் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளும் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது 12 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் தற்போதைய நிலவரப்படி, 60 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 29 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளிலும், மற்றவை 23 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
மொத்தம் 60 தொகுதிகள் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 தொகுதிகள் தேவை. அதே நேரத்தில் பாஜக 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
English Summary
Manipur state assembly election results