கனிம வள கொள்ளை... அதிகாரம் வாங்கி தர சொல்லுங்க.. பொன்.ராதாகிருஷ்ணனை சாடிய மனோ தங்கராஜ்..!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை கிராம ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதைக் கூட்டத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் "கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்வதை தடுக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. மத்திய அரசு கனிம வளங்களை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்ல அனுமதி வழங்கி உள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலத்திலிருந்து கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்கும் அதிகாரத்தை பெற்று தந்தால் அதை மாநில அரசு கண்டிப்பாக தடுக்கும்.

இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் மத்தியில் மேடையில் விவாதிக்க தயாராக உள்ளேன். பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது குமரி மாவட்டத்தில் 39 வாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

பிற மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை 3 கோடி ரூபாய்க்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தென் மாவட்டங்களில் கனிம பொருட்கள் கடத்தலை தடுக்க சிறப்பு தடுப்பு பிரிவை ஏற்படுத்தியுள்ளார். இந்த தகவலை தெரிந்து வைத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசுக்கு எதிராக திரித்து கூறுகின்றனர்" என செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ManoThangaraj explained state govt no authority to block mineral resources


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->