வேட்பாளராக களமிறங்கும் மன்சூர் அலிகான் - பரபரப்பில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் கூட்டணி, மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! 

அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என்று தெரிவித்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில், "தமிழ் தேசிய புலிகள்" என்ற தனது கட்சி பெயரை "இந்திய ஜனநாயக புலிகள்" என்று மாற்றியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mansoor alikhan candidate of arani


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->