1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி... மக்கள் ஆதரிப்பார்கள் - மன்சூர் அலிகான் பகீர் பேட்டி.!
Mansoor Alikhan interview speech
மக்களவைத் தேர்தலை ஒட்டி வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட வருகிறார்.
பிரசார கடைசி நாளான இன்று நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,
நான் வேலூர் தொகுதியில் ஆள் பலம், பணபலம் இல்லாமல் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். கடந்த 1980 இல் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜனாப் அப்துல் சமது சுயேசையாக நின்று வெற்றி பெற்றார்.
![](https://img.seithipunal.com/media/Election Voting.jpg)
அந்த பள்ளப்பட்டி கிராமம் தான் எனது சொந்த ஊர். அங்கு தான் நான் படித்து வளர்ந்தேன். மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவை கொடுக்கின்றனர்.
சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவேன். பா.ஜ.கவிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்குகளை பிரிப்பதற்காக தேர்தல் நின்றேன் என வதந்தி பரப்புகின்றனர்.
ஆரம்பத்திலிருந்து பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறேன். சுயசியாக வெற்றி பெற முடியாது என சொல்கின்ற பல பேர் சுயேசையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரிகளாக உள்ளனர். என்னை மக்கள் ஆதரிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
Mansoor Alikhan interview speech