வீரத்தின் அடையாளம் மாமன்னர் மருதுபாண்டியர்கள் - எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


மருதுபாண்டியர்கள் அவர்களின் 223-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜையையொட்டி அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும், வணங்கி போற்றுகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்டத்தின் போது,  இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக மருது பாண்டியர்கள், போரை நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து மருது சகோதரர்கள் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர். 

இன்று இவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக தமிழகம் முழுவதும் 223-ஆவது  மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது

இந்த நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலேய அரசுக்கு எதிரான முதல் பிரகடனமாம் "ஜம்பு தீவு பிரகடனம்" அறிவித்து,நாட்டின் விடுதலைக்காக போராடி அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்து, வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் அவர்களின் 223-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜையையொட்டி அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும், வணங்கி போற்றுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mark of heroism marudhupandiyargal edappadi palaniswami


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->