போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

அதன் படி, போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்றும், போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு தமிழக மக்கள், இளைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தை சார்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று  மன்றாடி கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்றும், போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Let unite to create a drug free tamil nadu chief minister mk stalin melt down


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->