கோவையில் பயங்கரம் : கல்லூரி மாணவர்கள் மோதலில் 3 பேருக்கு கத்திக்குத்து! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவர், கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வரும் நிலையில், இவர் கோவை சவுரி பாளையம் சாலையில் உள்ள  அண்ணா நகர் பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.

இதற்கிடையே, ராகுலுக்கும், அதே கல்லூரியில் பி.பி.ஏ.முதலாம் ஆண்டு படிக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி என்பவருக்கும் சீனியர்-ஜூனியர் பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 19-ம் தேதி இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்ட போது சக மாணவர்கள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை ராகுல் காந்தி, தனது நண்பர்களுடன்  ராகுல் தங்கியிருந்த அறைக்கு சென்ற நிலையில், ராகுல் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி கத்தியால் குத்தியதில், ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ் பாண்டியன், ரோஷன் ராஜா ஆகியோருக்கு தலை, கை, மார்பு, கழுத்து பகுதிகளில் கத்திக்குத்து ஏற்பட்டது.

இதையடுத்து காயம் அடைந்த மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த  சம்பவம் தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி, கெவின் சதீஷ் மற்றும் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terror in coimbatore 3 people were stabbed in a clash between college students


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->