நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி.? மாயாவதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்திர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி நேற்று தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிறகு பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி எந்த கூட்டணியுடனும் சேராமல் தனித்து போட்டியிடும். கூட்டணியால் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற பலன்களை விட இழப்புகளை அதிகம்.

கூட்டணியால் வாக்குகள் கூட்டணிக்கு செல்லலாம் செல்லலாம், ஆனால் மற்ற கட்சிகளுக்கு தங்களது வாக்குகளை எங்கள் வேட்பாளருக்கு மாற்றுவதற்கான சரியான எண்ணமோ திறனோ இல்லை. இது எங்கள் கட்சித் தொண்டர்களின் மன உறுதியை பாதிக்கிறது. எனவே நாங்கள் தனியாகவே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குறித்து பேசிய அவர், பகுஜன் சமாஜ் கட்சி நலனுக்காக இரு அணிகளும் சிறிதும் செய்யவில்லை, குறுகிய அரசியலில் ஈடுபடுவதன் மூலம் சமூகத்தை உடைப்பதிலும், பலவீனப்படுத்துவதிலும் அவர்கள் மும்முரமாக உள்ளனர். எனவே அவர்களிடம் இடைவெளியை கடைப்பிடிப்பது நல்லது என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayavathi speech about parliament election alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->