ஏஜென்ட் மூலம் "போதைப் பொருள் சப்ளை".!! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு வீடியோ.!!
Mcsambath alleged drugs supplied to school college with agents
தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி வந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியதோடு தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாபர் சாதிக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிய இந்நிலையில் அவர் தலைமறைவாக உள்ளார்.
இத்தகைய பரபரப்பான சூழலில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரையில் 180 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் வெளியிட்டுள்ள வீடியோவில் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்துள்ளது. அனைத்து மாணவர் செல்வங்களும் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. புள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதைப் பொருடகள்.
நகை ஏஜென்ட் வைத்து அங்கங்கே கொண்டு சென்று பொருட்களை எளிதாக கிடைக்க வழி செய்தது திராவிட முன்னேற்ற கழக ஆட்சிதான். தங்கள் வீட்டுப்பிள்ளை போல தானே தமிழகத்தில் உள்ள அனைத்து பிள்ளைகளையும் நினைக்க வேண்டும்.
போதைப் பொருள் புழக்கத்தை கண்டுகொள்ளாத மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் குடியாத்தம் திமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
புறப்பட்ட மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இது தனிப்பட்ட பிரச்சனை கிடையாது நாட்டின் பிரச்சனை. எனவே அனைத்து மாணவச் செல்வங்களும் இளைஞர் பட்டாளங்களும் வியாபாரிகளும் அனைத்து பெற்றோர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
Mcsambath alleged drugs supplied to school college with agents