மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு.!!
mdmk new post for durai vaiko
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று 10 மணிக்கு சென்னையில்நடைபெற்று வருகிறது. கட்சியில் காலியாக உள்ள தலைமை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது.
2 துணைப் பொதுச்செயலாளர்கள், ஒரு தலைமைக் கழகச் செயலாளர் மற்றும் ஒரு தணிக்கைக் குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவங்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு முழு அதிகாரம் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
English Summary
mdmk new post for durai vaiko