மதிமுகவையும் திமுகவையும் பிரிக்க சதி வேலை நடக்கிறது - துரை வைகோ - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் மதிமுக திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக பொதுச்செயளாலர் வைகோவின் மகன் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார்.

பிரச்சாரத்தில் பேசும் போது உயிரே போனாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டேன் என்று துரை வைகோ பேசியது பெரும் சர்ச்சை ஆனது. அதனைத் தொடர்ந்து துரை வைகோ  அண்ணாமலையிடம் பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து துரை வைகோவிடம் கேட்டபோது, துரை வைகோ கூறியதாவது, நான் ஏன்  அண்ணாமலையுடன் பேசப் போகிறேன். நான் முதுகுவலி பிரச்சனைக்காக சிகிச்சை பெற சென்னையில் தங்கி உள்ளேன். மதிமுகவையும் திமுகவும் பிரிக்க சதி வேலைகள் நடைபெற்று வருகிறது. இது திமுகவிற்கும் தெரியும் அவர்கள் இதை நம்பு போவதில்லை என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mdmk party and dmk party break plan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->