பிளேட்டை அகற்ற வேண்டும்! வைகோ மருத்துவமனையில் அனுமதி!  - Seithipunal
Seithipunal


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை, வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருந்த பிளேட்டை அகற்ற அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக வைகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக முதன்மை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதத்தில் வீட்டில் தவறி விழுந்ததன் காரணமாக வைகோவின் வலதுகை தோள்பட்டையில் எலும்பு முறிவானது. அப்போது பிளேட் வைத்து அதற்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

தற்போது எலும்புகள் கூடியதால், பிளேட்டை அகற்ற வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால், இதற்காக வைகோ தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK Vaiko Admitted in hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->