தமிழகத்தின் தாய் மு.க.ஸ்டாலின்.. மக்களுக்கான திராவிட மாடல் ஆட்சி இது - அமைச்சர் எ.வ.வேலு.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் நடந்த அரசு விழாவில் வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, மகளிர்திட்டம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட 13 துறைகளின் வாயிலாக அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்குதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குதல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது விழாவில் பேசிய அமைச்சர் வேலு, 13 துறைகளில் 3662 குடும்பங்களுக்கு 6.35கோடி ரூபாய் மதிப்பில் பல நலத்திட்ட உதவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது தான் அனைவருக்கும் சமமான ஆட்சி.

 தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திராவிடமாடல் ஆட்சி யாரையும் வஞ்சிக்காது. ஆகவே அனைவருக்கும் உதவியை மட்டுமே செய்யும். ஏழை, எளிய மக்கள், நடுத்தரம் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள மக்களுக்கு அனைத்துத் திட்டங்களும் சென்றடையும் நோக்கில் தான் சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் தாயாக முதல்வர் ஸ்டாலின் இருந்து புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுயஉதவி குழு கடன் திட்டம், நகைக்கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என பல திட்டங்களை கொண்டுவருவது தான் தமிழக முதல்வரின் எண்ணம் ஆகும். 

கட்சி பாகுபாடு இன்றி அனைவருக்கும் பொதுவாக நன்மை பயக்கும் அடிப்படையில் தமிழக அரசு இருக்கிறது. தமிழக மக்களுக்காக நடந்து கொண்டிருக்கும் தமிழர்களின் ஆட்சி என்று அமைச்சர் எ.வ.கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister EV Velu speech about DMK govt in thuruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->