'அடுத்த பிறந்த நாளில் உதயநிதி அமைச்சரானால்' அமைச்சர் மா.சு.பேட்டி.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். 

இதனை முன்னிட்டு அவருக்கு அதிகாலையில் இருந்தே அரசியல் வட்டாரங்கள், சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் அண்ணா, கலைஞர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், தனது தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றார். இது குறித்து, அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் உதயநிதி ஸ்டாலின் அடுத்த ஆண்டு அமைச்சராக பிறந்த நாளை கொண்டாடுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "அப்படி ஒரு விஷயம் நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். அதற்கான முழு தகுதியும் உதயநிதிக்கு இருக்கிறது. இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை. வளர்ந்து வரும் தலைவராக இருக்கும் உதயநிதி அமைச்சர் பதவிக்கு அனைத்து சிறப்பு தகுதிகளையும் கொண்டவர்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister ma Subramaniyan about udhayanithi Birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->