திமுக அமைச்சர் நாசர் மகனின் பதவி பறிப்பு..பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி...!! - Seithipunal
Seithipunal


திமுகவின் ஆவடி மாநகர் செயலாளராக பால்வளத் துறை அமைச்சர் நாசரின் மகன் அசிம்ராஜா சமீபத்தில் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் நாசரின் மகன் அசிம்ராஜாவின் மாநகர் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆவடி மாநகர் செயலாளர் பொறுப்பில் இருந்த ஆசிம்ராஜாவை விடுவிப்பதாகவும், அவருக்கு பதில் ஆவடி மாநகரை சேர்ந்த சன்.பிரகாஷ் என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசிம்ராஜாவின் பதவி பறிப்பு குறித்தான எந்த விளக்கமும் திமுக சார்பில் தெரிவிக்கப்படவில்லை. திமுக அமைச்சர் ஆவடி நாசரின் மகன் வகித்து வந்த பதவி பறிக்கப்பட்டிருப்பது திமுகவினர் இடையே பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Nasser son dmk post was revoked by DuraiMurugan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->