'என் மகன் திருமணம்?' சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மூர்த்தி.! பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பி.மூர்த்தி இருக்கின்றார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தைச் சேர்ந்தவர். கடந்த 2021 தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மதுரை திமுக வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கின்றார்.

இந்த விழா மதுரை மட்டுமல்லாமல் தமிழகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. பாண்டி கோயில் இருக்கும் மைதானத்தில் மாநாடு போல இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு பந்தல் போடப்பட்டது.

ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் சாப்பிடும் வகையில் பந்தி அமைக்கப்பட்டது. அதிலும், சைவம், அசைவம் என்று தனித்தனி பந்தல்கள் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தனி பந்தல்கள். தனியார் நிறுவனம் ஒன்றுதான் இது குறித்த ஏற்பாடுகளை செய்துள்ளது. அத்துடன் மொய் பணத்தை எண்ண 50 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணமானது கருப்பு பணத்தை மறைக்கும், முயற்சி என்றும் இது பொது மக்களுக்கு இடையூறாக வகையில் இந்த திருமணம் நடைபெற்றது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இத்தகைய நிலையில், இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி, சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், "பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தான் நடைபெற்றது. 

பொறாமை கொண்ட நபர்கள் எதையாவது கூறுவதற்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியுமா? என் மகனின் திருமணத்தை மிகைப்படுத்தி பேசுவது உண்மையல்ல. பொது மக்களுக்கு எந்த மாதிரியான நெருக்கடி ஏற்பட்டது என்பதை கூற வேண்டும். வந்த நபர்கள் அனைவருமே விரைவில் சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும் என்றுதான் அப்படிப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. என் மீது வைக்கப்படும் தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கு சரியான ஆதாரங்கள் இருந்தால் நான் நிச்சயம் பதில் சொல்வேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister p moorthi about his son marriage issue 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->