சிறையில் இறை வழிபாட்டுக்கு தனி ஏற்பாடுகள் கிடையாது! ஈபிஎஸ்-க்கு சிறைத்துறை அமைச்சர் பதிலடி!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில், குறிப்பாக வேலூர் சிறையில் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு ஏதோ ஒரு காரணத்துக்காக இஸ்லாமிய சிறைவாசிகள் தொழுகை நடத்தும் மசூதியை மட்டும் திறக்காமல் மூடி வைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

வேலூர் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளதாகவும், தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள் அவர்களின் மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். இதுகுறித்துப்பேசிய அவர் "வேலூர் சிறை பக்கம் அவர் போனதில்லை என்று நான் நினைக்கிறேன். சிறை செயல்பாடுகள் குறித்து அவருடைய  அமைச்சரவையில் இடம் பெற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எந்த சிறையிலும் இறைவழிபாட்டுக்கு என்று தனி ஏற்பாடுகள் செய்வது கிடையாது. அவரவர் தங்களின் விருப்பப்படி வழிபடுகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister radhupathi reply to EPS there are no arrangements for religious worship in prison


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->