அரைவேக்காடு அண்ணாமலை சொல்வது போல் எதுவும் இல்லை.! அமைச்சர் ரகுபதியின் சரவெடி.!! - Seithipunal
Seithipunal


தற்போதைய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீதான வழக்கில் தண்டனை பெற்று அதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ரகுபதி "அவரை அரைவேக்காடு அண்ணாமலை என சொல்லலாம். 

ஏனென்றால், நான் வழக்குகளில் தண்டனை அடைந்தவன் என சொல்லியிருக்கிறார். இதைவிட முட்டாள்தனம் ஒன்றும் கிடையாது. இதற்கு நீதிமன்றத்தில் நான் என்ன வழக்கு வேண்டுமானாலும் போடலாம். வழக்கு போட்டு அவருடன் சண்டையிட நான் விரும்பவில்லை. என் மீது எந்த வழக்கும் கிடையாது, தண்டனையும் விதிக்கப்படவில்லை. 

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவன் நான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பழிவாங்கும் நோக்குடன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. நான் 2 நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டுள்ளேன்" என அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister raghupathi response to Annamalai allegation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->