செங்கோட்டையன் தலைமையில் தான் அதிமுக - பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன், பாஜகவில் இணைவதாக செய்தி பரவியது. இதற்கு அப்போதே அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். அப்போதும் இந்த புகைச்சல் ஓயவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம், திமுக அமைச்சர ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா, வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும். அதிமுகவில் பாஜக பிளவை ஏற்படுத்தும்.

எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால் அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம், ஆனால் பாஜக நிச்சயம் செய்யும்” என்று பரபரப்பாக பேசியுள்ளார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இது மாற்றுக்கட்சியை சார்ந்தவர்களுக்கும் தெரியும்.‌ சட்ட அமைச்சர் என்னை குறித்து கூறிய கருத்து வருந்தத்தக்க ஒன்று. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிந்து புரிந்து, இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். 

என்னை பொறுத்தவரை மற்றவரை கூட அரசியல் வாழ்க்கையில் குறை கூறாமல் என் வாழ்க்கை பயணத்தில் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். அதிமுக தொண்டர்களுக்கு என்றைக்குமே நான் தூணாக நின்று செயலாற்றி இருக்கிறேன் என தெளிவுபடுத்துகிறேன்” என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister ragupathy press meet about admk sengottaiyan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->