ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் ரகுபதி விளக்கம்!
Minister Ragupathy Say about TNGovt Order issue
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை என்று, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துவது, "ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம்.
ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
இந்தியாவுக்கே முன் மாதிரி சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை மட்டுமின்றி ஒழுங்கு முறைகளையும் கொண்டு வர உள்ளோம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.
அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Minister Ragupathy Say about TNGovt Order issue